/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்தடி நீரின் உவர் தன்மையை மாற்ற குளங்கள் சீரமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் புது முயற்சி
/
நிலத்தடி நீரின் உவர் தன்மையை மாற்ற குளங்கள் சீரமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் புது முயற்சி
நிலத்தடி நீரின் உவர் தன்மையை மாற்ற குளங்கள் சீரமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் புது முயற்சி
நிலத்தடி நீரின் உவர் தன்மையை மாற்ற குளங்கள் சீரமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் புது முயற்சி
ADDED : நவ 10, 2024 06:46 AM

விருதுநகர் : நிலத்தடி நீரின் உவர் தன்மையை குறைக்க ஆயிரத்திற்கும் மேல் குளங்களை உருவாக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 96.50 மி.மீ. மாநில சராசரியை விட குறைவு. மாவட்டத்தில் சிறுநீரக கோளாறால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உவர் தன்மை கொண்ட நிலத்தடி நீர் முக்கிய காரணம்.
நிலத்தடி நீரின் தன்மையை மாற்ற மழைநீர் சேகரிப்பு அவசியம். அதற்கும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் குளங்கள், கண்மாய்களை மறு சீரமைத்தல் அவசியம் என உணர்ந்த மாவட்ட நிர்வாகம் புதிய குளங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 1087 குளங்கள் உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 266 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள குளங்களை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள், ஓவர்சீயர்கள் குளங்களை வடிவமைக்கும் பணியை செய்கின்றனர். குளத்தின் அளவு, ஆழத்தை நிர்ணயம் செய்ய நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, நீர் மேலாண்மைக்கான முறையான நுழைவாயில், வெளியேறும் வழிகளைக் கொண்ட குளங்களை வடிவமைக்கின்றனர்.
மண்அரிப்பைத் தடுக்க குளங்களை உருவாக்க தோண்டப்பட்ட மண், குளத்தைச் சுற்றிலும் கரைகளை ஏற்படுத்தவும் நீர்க்கசிவைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: மாவட்டத்தில் மேல்வைப்பாறு, கீழ்வைப்பாறு, குண்டாறு நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. 6 நீர்தேக்கங்கள் உள்ளன.
அர்ஜூனா, கவுசிகா, காயல்குடி, வைப்பாறு நதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. குளம் உருவாக்க வாய்ப்புள்ள பகுதிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது. பெய்யும் மொத்த மழைநீரை குளங்களில் நிரப்புவதன் மூலம் விவசாயம், குடிநீர், நிலத்தடிநீர் மேம்பாடு அதிகரிக்கிறது. அறிவியல் பூர்வமாக நிலத்தடி நீர் செறிவூட்டல் நிகழ்வதால் நிலத்தடி நீரின் உவர் தன்மையும் குறைகிறது, என்றார்.