/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் தடுப்புகள் சீரமைப்பு
/
நான்கு வழிச்சாலையில் தடுப்புகள் சீரமைப்பு
ADDED : அக் 14, 2024 09:03 AM

விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு இணையும் இடத்தில் இருந்த நிலையற்ற தடுப்புகளால் விபத்து அச்சம் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக பிளாஸ்டிக் தடுப்புகள் அகற்றப்பட்டு பேரி கார்டுகள் வைக்கப்பட்டது.
விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் சிரமமின்றி செல்வதற்காகவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் சிவகாசி செல்லும் சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் வைக்கப்பட்டது.
ஆனால் இங்கு வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகள் காற்றின் வேகம், வாகனங்கள் வேகமாக செல்லும் போது வரும் எதிர்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நிலையற்ற தன்மையில் இருந்தது. இவை எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலை நீடித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதையடுத்து விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பிளாஸ்டிக் தடுப்புகளை விருதுநகர் போக்குவரத்து போலீசார் அகற்றி விட்டு பேரிகார்டுகளை வைத்தனர். மேலும் சிவகாசி ரோட்டில் அத்துமீறி வாகனங்கள் செல்லாமல் இருக்க பேரிகார்டுகளை நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படாதவாறு வைத்தனர்.