ADDED : ஆக 02, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: இன்று முதல் ஆக.5 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்ட இயக்கம் நடக்கும், என செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், அரசாணை 204ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 29, 30ல் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஏற்கனவே அறிவித்திருந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கோரிக்கை கடிதம் வழங்கும் இயக்கத்துடன் சேர்த்து கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்ட இயக்கம் இன்று முதல் ஆக. 5 வரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
