/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை
/
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை
ADDED : மார் 29, 2025 06:28 AM
அருப்புக்கோட்டை: காரியாபட்டி அருகே தோனுகால் கிராமத்தில் தனியார் கிரானைட் குவாரி அமைத்து 20 ஆண்டுகள் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
குவாரி அனுமதியைஎதிர்த்து தண்டியநேந்தல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்: குண்டாறு வடிநில பாசன பகுதியில் ஆற்றின் கரை அருகில் குவாரிக்கு அனுமதி கொடுத்தது தவறு. கற்கள் வெட்டி எடுக்க அதிக அளவில் வெடிப்பொருட்கள் பயன்படுத்தும் போது சப்தமும், இரைச்சலும், தூசு படலமும் ஏற்படும்.
வெட்டி எடுக்கப்படும் கற்கள் கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள், வயல்வெளிகளில் கொட்டி வைக்கப்படும். இதனால் நீர் நிலைகள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே மதுரை மாவட்டம் மேலூரில் கண்மாய்கள், குளங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டது விவசாயிகளுக்கு தெரியும். தமிழக அரசு தனியார் கிரானைட் குவாரி அனுமதியை விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்.