/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுற்றுலாவிற்கான வனப்பகுதி நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

ADDED : ஜூன் 04, 2025 12:43 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி ஒட்டிய ஆற்றுப்பகுதி நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை உடனே துவங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார் கோயில் ஆறு அய்யனார் கோவில், சேத்துார் ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயில் பின்புறம் உமையாள் குளம் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் நகரி ஆற்றில் வனத்துறை செக்போஸ்ட் அடுத்த பகுதி முழுவதும் விடுமுறையினால் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் போதிய கண்காணிப்பு இல்லாததால் அவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் இதர கழிவுகள் ஆங்காங்கு தேக்கமாகி உள்ளது.
இது நீர் நிலைகளை தேடி வரும் வன விலங்குகளுக்கும், ஆடு மாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே விடுமுறை முடிந்த இந்த நேரத்தில் நீர் நிலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை வனத்துறையினருடன் இணைந்து என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் தன்னார்வலர்கள் அகற்றி சுத்தமாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.