/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏ.டி.எம்., மையத்தை சீரமைக்க கோரிக்கை
/
ஏ.டி.எம்., மையத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 13, 2025 06:10 AM
விருதுநகர் : மார்க்சிஸ்ட் நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: நான் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் விருதுநகர் கிளையில் வாடிக்கையாளராக உள்ளேன். இவ்வங்கியானது, விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ளது.
இதில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர்.ஏ.டி.எம்., மையமோ வங்கியின் வளாகத்தில் ஒன்று மட்டுமே உள்ளது. அதில் தான் பணத்தை எடுக்கவும், செலுத்தவும் வேண்டும். மேலும் விருதுநகரில் வேறு எங்கும் இந்த ஏ.டி.எம்., மையம் கிடையாது.
பழுது காரணமாக ஏ.டி.எம் மையத்தில் அடிக்கடி பணம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.அடிக்கடி பழுதாகி வரும் இந்த இயந்திரத்தை அகற்றி விட்டு, பிற வங்கிகளில் உள்ளதுபோல், பணம் எடுக்க தனியாகவும், பணம் செலுத்த தனியாகவும் தமிழ் மொழி உள்ள வகையில் ஏ.டி.எம்.,இயந்திரங்களை நிறுவ வேண்டும், என கேட்டுள்ளார்.