/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூலக்கரையில் பழுதாகி கிடக்கும் குப்பை வண்டிகள் சீரமைத்து இயக்க கோரிக்கை

ADDED : அக் 06, 2025 04:31 AM

விருதுநகர், : விருதுநகர் சூலக்கரை ஊராட்சியில் பழைய ரேஷன் கடை கட்டடத்திற்கு அருகே பழுதாகிய குப்பை வண்டிகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சூலக்கரை ஊராட்சி பகுதி, நகராட்சியில் இருந்து புறநகரில் இருந்தாலும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு மிகவும் அருகே இருப்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் அரசு அலுவலர்கள், மத்திய, மாநில அரசுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், தொழிலதிபர்கள், போலீசார் என பல தரப்பினரும் வசித்து வருகின்றனர்.
இங்கு குப்பை சேகரிக்கும் பணிகள் துாய்மை பணியாளர்களுக்கு அதிகரித்துள்ளது. ஊராட்சியில் குப்பை சேகரிப்பு பணிக்காக தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த வண்டிகளில் பழுதானவற்றை தற்போது சீரமைக்காமல் பழைய ரேஷன் கடைக்கு அருகே அப்படியே கிடப்பில் போட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் சுகாதார பணிகளில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களால் முறையாக பணியை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே சூலக்கரை ஊராட்சியில் பழுதாகி ஓரங்கட்டப்பட்ட தள்ளு வண்டிகளை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.