/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயிலை மதுரை வழி தினமும் இயக்க கோரிக்கை
/
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயிலை மதுரை வழி தினமும் இயக்க கோரிக்கை
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயிலை மதுரை வழி தினமும் இயக்க கோரிக்கை
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயிலை மதுரை வழி தினமும் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 12:00 AM
ராஜபாளையம்: செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான வழித்தடத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும், என ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தென் மாவட்ட பயணிகளுக்கு வணிக நகரான மதுரை வழியே மயிலாடுதுறை செல்லும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 22 நாட்கள் வரை மதுரை நகரை தவிர்த்து அருப்புக்கோட்டை, மானாமதுரை ,சிவகங்கை ,காரைக்குடி வழியே மாற்று பாதையில் சென்று வருகிறது. இதை தவிர்த்து மதுரைக்கு கூடுதல் ரயில் அல்லது மதுரையை தொட்டு மானாமதுரை வழியே செல்லும்படியான ரயில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன்: ஏற்கனவே தினசரி சென்று வந்த மதுரை -செங்கோட்டை ரயில் மற்றும் திண்டுக்கல் -மயிலாடுதுறை இரண்டையும் இணைத்து மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக 2022 முதல் இயங்கி வருகிறது.
இந்த ரயில் மூலம் தென்காசி சங்கரன்கோவில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி பகுதி மக்களுக்கு தஞ்சாவூர் கும்பகோணம் உள்ளிட்ட ஆன்மிக நகரங்களுக்கு செல்வதற்கு நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது. பயணிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து மயிலாடுதுறை ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் கடந்த மாதம் இணைக்கப்பட்டது.
கொடைரோடு வாடிப்பட்டி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும்போது மதுரை செல்லாமல் சிவகங்கை மானாமதுரை வழியாக மயிலாடுதுறை செல்கிறது. இதனால் மதுரை செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த ரயில் வழக்கமான ராஜபாளையம், மதுரை, திண்டுக்கல் வழித்தடத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும்.
மதுரை - திண்டுக்கல் இடையே பராமரிப்பு நடைபெறும் காலங்களில் மதுரை சென்று மானாமதுரை செல்ல வேண்டும். அது முடியாத பட்சத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.