/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
/
ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
ADDED : ஜன 13, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புறவழிச் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் உள்ள கோபாலபுரம் கிராமத்து வழியாகவும், ராமசாமிபுரம் வழியாகவும் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
சாலையின் தரத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். உடன் கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜன் கோட்ட பொறியாளர்கள் லிங்குசாமி, திருவேங்கட ராமலிங்கம், பாக்கியலட்சுமி இருந்தனர்.