/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆராய்ச்சிகளை மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
/
ஆராய்ச்சிகளை மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
ஆராய்ச்சிகளை மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
ஆராய்ச்சிகளை மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
ADDED : ஆக 16, 2025 11:59 PM

சிவகாசி: ''ஆய்வு பணிகளை பெரும் ஆராய்ச்சி கட்டுரைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதை நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் முன் வர வேண்டும்,'' என இந்திய பாதுகாப்புத்துறை விஞ்ஞானி டில்லி பாபு விஜயகுமார் பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி பெங்களூரு தமிழ்நாடு வானியல் விண்வெளி ஆராய்ச்சி கழகம், சென்னை இந்திய வானியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்பக் கழகம், ராமன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு நடந்தது.
இதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக மூத்த விஞ்ஞானி டில்லி பாபு விஜயகுமார் பேசுகையில், இந்தியா போர் விமானம், நீருக்கடியில் செல்லும் கப்பல், செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் கனரக வாகன தொழில்நுட்பம் என பல வகைகளில் முன்னேறி உள்ளது.
நீரிலும் நிலத்திலும் சதுப்பு நிலங்களிலும் செல்லும் நந்தி எனும் பெயருடைய மிதவை வாகனத்தை முதன் முதலில் உருவாக்கியவர் அப்துல் கலாம். ஆய்வு பணிகளை பெரும் ஆராய்ச்சி கட்டுரைகளோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதை நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் முன் வர வேண்டும், என்றார்.
முன்னதாக கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். தமிழ்நாடு வானியல் அறிவியல் கழகம் தலைவர் ரமேஷ், இளைஞர் வானியல் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி, சிந்தையா, நித்யா, திருவள்ளூர் வானியல் கழகம் செயலர் ராஜராஜேஸ்வரி, ராமன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன், இந்திய வானியல் நிறுவனம் விஞ்ஞானி கிறிஸ்டின் கார்த்திக், தமிழ்நாடு வானியல் அறிவியல் கழகம் பொதுச் செயலாளர் மனோகர், மாநில ஒருங்கிணைப்பாளர் பேசினர்.