/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்வாயில் வெளியேறிய கழிவுநீர் : கழுவனச்சேரி மக்கள் எதிர்ப்பு
/
கால்வாயில் வெளியேறிய கழிவுநீர் : கழுவனச்சேரி மக்கள் எதிர்ப்பு
கால்வாயில் வெளியேறிய கழிவுநீர் : கழுவனச்சேரி மக்கள் எதிர்ப்பு
கால்வாயில் வெளியேறிய கழிவுநீர் : கழுவனச்சேரி மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 22, 2025 12:58 AM
காரியாபட்டி: காரியாபட்டியிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ஊருணி நிரம்பி கழுவனச்சேரி கால்வாயில் நுரை பொங்கி செல்வதால், அக்கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காரியாபட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செவல்பட்டி ஊருணியில் தேங்கி வருகிறது. புழு, பூச்சிகள் துர்நாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு, வருகின்றனர். இந்நிலையில் கழிவு நீரை வெளியேற்றும் வகையில் வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது. கால்வாய் வழியாக கழிவு நீரை வெளியேற்றப் போவதாக தகவல் கசிந்தது. குடிநீர், நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கும் என அக்கிராமத்தினர் கால்வாயில் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பருவ மழை காரணமாக காரியாபட்டியில் பெய்த கனமழைக்கு, ஊருணி நிரம்பியது. அதிலிருந்து வெளியேறிய கழிவுநீர் கால்வாய் வழியாக நுரை பொங்கி சென்றது. ஆக்கிரமடைந்து 50 க்கு மேற்பட்ட அக்கிராமத்தினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டது. மாற்றி அமைப்பதாக உறுதி அளித்தனர். இருந்தும் கழிவுநீர் வரத்து கால்வாய் வழியாக செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். நடவடிக்கை இல்லாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.