ADDED : ஜன 30, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதியம் நடைமுறைக்கு கொண்டுவருதல், சத்துணவு ஊட்டச்சத்து பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வதியம் வழங்குதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்டத்துணைத் தலைவர் ராமசுப்பு, பொருளாளர் சண்முக சுந்தரம், இணைச் செயலாளர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.