/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலத்தில் தவறி விழுந்து ஓய்வு எஸ்.ஐ., உயிரிழப்பு
/
பாலத்தில் தவறி விழுந்து ஓய்வு எஸ்.ஐ., உயிரிழப்பு
ADDED : ஜூலை 08, 2025 04:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்தவர் கணேசன், 60; ஆயுதப்படை எஸ்.ஐ.,யாக பணியாற்றி, மே மாதம் ஓய்வு பெற்றார்.
நேற்று முன் தினம், கூமாபட்டியில் உள்ள அவரது தென்னந்தோப்புக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு, பாட்டகுளம் நான்கு வழிச்சாலை வழியாக டூ-வீலரில் வந்தார். இரவு, 8:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் சர்வீஸ் ரோட்டில் இறங்கிய போது, மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

