/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : பிப் 14, 2025 06:23 AM

விருதுநகர்: சாத்துார் தாசில்தார் உள்ளிட்ட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வட்டக்கிளை தலைவர் மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட பொருளாளர் மலர்பாண்டியன், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன், சிவகாசியில் வட்டக்கிளை தலைவர் தங்கமாரி, வெம்பக்கோட்டையில் வட்டக்கிளை தலைவர் சிவராமசுப்பிரமணியன், சாத்துாரில் வட்டக்கிளை தலைவர் பாலு, விருதுநகரில் மாவட்ட துணை தலைவர் ராணி, அருப்புக்கோட்டையில் வட்டக்கிளை தலைவர் சரவணக்குமார், காரியாபட்டி கிளை செயலாளர் பாலமுருகன், திருச்சுழி வட்டக்கிளை தலைவர் துரைமுருகன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்தது.
சங்கத்தினர் கூறுகையில், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் பட்டா மாறுதல், சான்றிதழ் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவோம், என்றனர்.