ADDED : ஜன 21, 2025 05:28 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மருங்கூர் கண்மாய் பகுதியை சேர்ந்த விவசாயி கேசவன் 58,  புதுக்குளம், மருங்கூர் கண்மாய்க்கு இடையே 40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 22 ஏக்கர் கரும்பும், 18 ஏக்கரில் 110 நாள் பயிரான டி.வி 472 ரக நெல் பயிரிட்டு  அறுவடைக்கு தயாராகி தண்ணீர் பாய்ச்சாமல் காயவைத்து காத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து பயிர்களும் சாய்ந்து மண்ணில் சரிந்ததுடன் நிறைந்துள்ள கண்மாய், அருகாமை விவசாய நிலங்களில் உபரி நீர், மழைநீர் என வயலில் வடிந்து மூழ்கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயி அரசிற்கு இழப்பீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

