/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ரோடுகளில் நடமாடும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
சாத்துாரில் ரோடுகளில் நடமாடும் கால்நடைகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் ரோடுகளில் நடமாடும் கால்நடைகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் ரோடுகளில் நடமாடும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 02, 2024 07:10 AM
சாத்துார்,: சாத்துார் நகரில் தீபாவளி விற்பனை களை கட்டி வருகிறது.இந்த நிலையில் ரோட்டில் சுதந்திரமாக உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.
முக்குராந்தல்அண்ணா நகர், குருலிங்கபுரம்,நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு மெயின்ரோடு களில் பசு மாடுகள் அதிக அளவில் உலா வருகின்றன. கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை கட்டி போட்டு வளர்க்க வேண்டும். ரோட்டில் கால்நடைகள் தனியாக உலாவினாலும்
ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அபராதம் விதிக்கும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான நிலையிலும் நகரில் கால்நடைகள் சுதந்திரமாக உலா வருவது தொடர்கதையாக உள்ளது.தற்போது தீபாவளி நேரம் என்பதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு செல்லுகின்றனர். கால்நடைகள் ரோட்டில் உள்ள வாகனங்களை முட்டி கீழே தள்ளி சேதப்படுத்தி விடுகின்றன.
ரோட்டில் உலா வரும் பசுமாடுகள் சாலை ஓரத்தில் உள்ள பூக்கடைகளில் உள்ள மாலைகளையும் ஓட்டல்கள் அருகில் கிடக்கும் எச்சில் இலைகளையும் உண்ண முற்படுகின்றன.இதனால் வியாபாரிகள் கால்நடைகளை கம்பால் அடித்து விரட்டுகின்றனர்.
இதன் காரணமாக மிரண்டு கால்நடைகள் ரோட்டில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மீது மோதி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைவதும் தொடர்கின்றது.நகராட்சி நிர்வாகம் ரோட்டில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.