/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
/
ரோட்டோரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
ரோட்டோரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
ரோட்டோரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
ADDED : அக் 11, 2024 04:50 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் பட்டு போன மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் முன்பிருந்தே நடப்பட்ட பல வகை மரங்கள் உள்ளன. புளி, வேம்பு என நிழல் மரங்கள் அதிகளவில் நடப்பட்டுள்ளன. இவற்றில் சில மரங்கள் அவற்றின் ஆயுட்காலத்தை கடந்து விட்டதால் அவை பட்டு போயுள்ளன. சில மரங்கள் ஆணி அடித்து விளம்பர பலகைகள் மாட்டியதாலும் ஆயுட்காலம் குறைந்து பட்டு போயுள்ளன.
இவ்வகை மரங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் வகையில் அவற்றின் கிளைகள், பட்டைகள் நொறுங்கி விழும் நிலையில் உள்ளன. கவனக்குறைவால் ஏதேனும் கார் மோதினாலும் இந்த மரங்கள் நொறுங்கி விடும். பட்டு போன இது போன்ற மரங்களை முறைப்படி அகற்ற வேண்டும். அந்த இடத்தில் கூடுதலாக 10 மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும்.
மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற பட்டு போன மரங்கள் விழும் அபாய நிலையில் உள்ளன. அவற்றை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். விருதுநகர் புதுக்கோட்டையில் இருந்து எரிச்சநத்தம் செல்லும் ரோட்டில் ஒரு மரம் இது போன்ற நிலையில் பட்டு போய் தான் காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் பட்ட மரங்களை அகற்ற முன்வர வேண்டும்.