/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறந்தவெளியில் மருத்துவ கழிவுகள் நோயாளிகளை பாதிக்கும் அபாயம்

ADDED : அக் 18, 2024 04:53 AM

நரிக்குடி: நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் லேப் முன் ரத்தக்கரை படிந்த கழிவுகள் உட்பட பல்வேறு மருத்துவ கழிவுகள் குப்பைகளாக கொட்டப்பட்டுள்ளன. மூடி வைக்காமல் திறந்த நிலையில் உள்ளது. இக்கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டவும், அன்றாடம் கொட்டப்படும் கழிவுகள் தேக்கி வைக்காமல் தினமும் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.