/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மோட்டார் பழுதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
மோட்டார் பழுதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு
மோட்டார் பழுதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு
மோட்டார் பழுதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : மார் 14, 2024 11:47 PM
விருதுநகர் : பாத்திமா நகர் கழிவு நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி நீர் மூழ்கி மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. தற்போது 30 எச்.பி மோட்டார் மட்டுமே இயங்குகிறது. அதுவும் பழுதாகி விட்டால், குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் சென்று விடும் என விருதுநகர் நகராட்சி அவசர கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் லீனா சைமன், பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: பாத்திமா நகர் கழிவு நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி நீர் மூழ்கி மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. தற்போது 30 எச்.பி மோட்டார் மட்டுமே இயங்குகிறது. அதுவும் பழுதாகி விட்டால், குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் சென்று விடும். எனவே விரைவில் பழுது பார்க்க வேண்டும்.
மாதவன், நகராட்சி தலைவர்: அனைத்து கழிவு நீரேற்று, உந்து நிலையங்களில் புதிய தானியங்கி மின் மோட்டார்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
ஏசுக்கனி, காங்.: ஏ4எஸ் ரோடு 700 மீட்டர் தூரம் உள்ளது. அதில் 300 மீட்டர் மட்டும் புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ரோட்டில் சேதமடைந்த பகுதியில் பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும்.
முத்துராமன், தி.மு.க.,: ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக ரோடு போடுவதற்கான ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அதில் தண்ணீர் தெளிக்காமல் உள்ளதால் தூசி பறக்கிறது. எனவே, தண்ணீர் தெளித்து ரோலர் மூலம் அழுத்தவேண்டும்.
கலையரசன், தி.மு.க.,: காமராஜர் பைபாஸ் ரோட்டில் இருபுறமும் ரோடு அமைத்து நடுவில் 30 மீ தூரத்திற்கு ஏன் சாலை அமைக்காமல் உள்ளது.
சரவணன், அ.தி.மு.க.,: 21 அங்கன்வாடி மையங்களில் புதிய மின் விசிறி அமைக்க ரூ.1.10 லட்சம் செலவாகுமா.
ராமச்சந்திரன், அ.ம.மு.க.,: அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்கிறது. தனது வார்டு பகுதியில் மட்டும் பணிகள் ஒப்பந்தம் விடவில்லை ஏன்.
மதியழகன், தி.மு.க.,: சமூக பொறுப்பு நிதி மூலம் அமைக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் எரியவில்லை. எனவே, அதை சரி செய்ய வேண்டும்.
சுல்தான் அலாவுதீன், தி.மு.க.,: 2வது தாமிரபரணி குடிநீர்த் திட்டத்தில் அருப்புக்கோட்டை ரோட்டில் ரயில்வே தண்டவாளத்தின் கீழ் பிரதான குழாய்கள் இன்னும் ஏன் பதிக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

