நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் - தாயில்பட்டி சாலையில் சுப்பிரமணியபுரம் சந்திப்பில் சல்வார்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்கள் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை 9:30 மணி முதல் 10:30 மணிவரை சாலை மறியல் செய்தனர்.
வெம்பக்கோட்டை போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ மாணவியர்களும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

