ADDED : ஆக 13, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சாத்துார், ஆக. 14-
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்டியாபுரத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தெருவிளக்குகளும் எரியவில்லை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மதியம் 12:30 மணிக்கு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேசி சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.
