ADDED : ஆக 13, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 14-
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, 26, விறகு வெட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன் தினம் மாலைசெம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் உடன் அருப்புக்கோட்டை சாய்பாபா கோயிலில் விறகு வெட்டும் பணி செய்தனர். அங்கிருந்த ஊழியர் கீழே அறுந்து கிடந்த மின் வயரை மாட்ட சொல்லி உள்ளார். வெள்ளைச்சாமி வயரை எடுத்து மேலே ஏணியில் ஏறி மாட்ட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
____
