/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைப்பால் சேதமாகும் ரோடு, வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் சேதமாகும் ரோடு, வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் சேதமாகும் ரோடு, வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் சேதமாகும் ரோடு, வீணாகும் குடிநீர்
ADDED : நவ 28, 2024 04:52 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மெயின் ரோடுகளில் குழாய் உடைப்பினால் குடிநீர் வீணாவதோடு ரோடும் சேதமாகி விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையம் சங்கரன்கோவில் மெயின் ரோடு, டி.பி மில்ஸ் ரோடு போன்ற பிரதான பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் சப்ளை மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சங்கரன்கோவில் ரோட்டில் பல மாதமாக குழாய் உடைப்பு தொடர்கதையாக இருந்து வருகிறது.
மேலும் மெயின் ரோடுகளில் குழாய் உடைப்பால் மேடு பள்ளங்களாக காணப்படுவதுடன் இரவு நேரங்களில் வேகமாக கடக்கும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.
குழாய் உடைப்பை தாமதிக்காமல் சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.