ADDED : அக் 21, 2025 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சி அம்மன் கோவில் பட்டியில் தெருக்களில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்போர் அவதிப் படுகின்றனர்.
சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சி அம்மன் கோவில் பட்டியில் ஐந்துக் கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் மூன்று தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது ரோடு முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதில் டூவீலர்கள் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தெருவில் தேங்குவதால் குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த தெருக்களில் ரூ. 10 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. ஆனால் ரோடு சீரமைக்கப்படவில்லை.
எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டையும் சீரமைக்க வேண்டும்.