/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடையும் இ-சேவை மைய கட்டடம் மக்கள் அதிருப்தி
/
சேதமடையும் இ-சேவை மைய கட்டடம் மக்கள் அதிருப்தி
ADDED : அக் 21, 2025 03:15 AM

சிவகாசி: சிவகாசி அருகே வடமலாபுரத்தில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வரும் கிராம இ சேவை மைய கட்டடத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே வட மலாபுரத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு ரூ. 17 லட்சத்தில் கிராம இ சேவை மையம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து பயன்பாட்டிற்கு வராத இக்கட்டடம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.
மற்ற ஊராட்சிகளில் இ சேவை மைய கட்டடம் ஊராட்சி அலுவலகமாகவும், ரேஷன் கடையாகவும், நுாலகமாகவும் என ஏதோ ஒரு தேவைக்கு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு கட்டடம் எந்த பயன்பாட்டிலும் இல்லாமல் சேதமடைந்து விட்டது.
இதனால் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் இ சேவையை பயன்படுத்த ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தங்கல், சாத்துார் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கட்டடத்திற்கு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி மாணவர்கள் விபரீதம் அறியாமல் சேதம் அடைந்த கட்டடத்தின் அருகிலேயே விளையாடுகின்றனர்.
மாணவர்கள் விளை யாடும் போதோ மக்கள் நடமாடும் போதோ கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பா விதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கட் டடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.