/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ்கள்: பயணிகள் எதிர்பார்ப்பு
/
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ்கள்: பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ்கள்: பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ்கள்: பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 21, 2025 03:16 AM
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு காலை, மாலையில் மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது. பாண்டியன் நகர், லட்சுமி நகர், சத்திரரெட்டியபட்டி செல்லும் மினி பஸ்ககளை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப் படுகிறது. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகளை பழைய பஸ் ஸ்டாண்டிற்கு ஏற்றி செல்வதற்கு ஆட்டோக்களில் அதிக கட்டணமாக வாங்கு கின்றனர். இதனால் பயணிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே பாண்டியன் நகர், லட்சுமி நகர், சத்திரரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மினி பஸ்களை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்க மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து ரயில் பயணிகளின் நலனிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.