/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு சேதம், தேங்கும் கழிவுநீர், திறந்தவெளி கழிப்பறை
/
ரோடு சேதம், தேங்கும் கழிவுநீர், திறந்தவெளி கழிப்பறை
ரோடு சேதம், தேங்கும் கழிவுநீர், திறந்தவெளி கழிப்பறை
ரோடு சேதம், தேங்கும் கழிவுநீர், திறந்தவெளி கழிப்பறை
ADDED : ஆக 16, 2025 11:58 PM
ராஜபாளையம்: ரோடு வசதியில்லை, வாறுகளில் தேங்கும் கழிவுநீர், காட்சி பொருளாக குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறையால் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பாதி தெருக்கள் ஜல்லி கற்களுடன் முழுமை அடையாமல் உள்ளது. மாதம் ஒரு முறை குப்பை அகற்றும் பணிகள் நடப்பதால் கழிவுகள் ஆங்காங்கு குவிக்கப்பட்டு சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தெரு சந்து பகுதிகளில் குடிநீர் குழாய் களுக்காக தோண்டப்பட்டு புதிய ரோடு பணிகள் நடைபெறவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட இரு குடிநீர் தொட்டிகள் சேதமாகி காட்சி பொருளாக மாறி உள்ளன.
தெருநாய்களால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்களை சந்திக்கின்றனர். மின் கம்பங்களில், மின்விளக்குகள் பழுதடைந்தால் உடனடியாக பராமரிப்பு செய்யப்படுவதில்லை. புதிய பகுதிகளுக்கு மின்விளக்கு அமைக்காததால் இரவு கும்மிருட்டாக உள்ளது.