/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் ஸ்டேஷனை ஒட்டி ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம்
/
போலீஸ் ஸ்டேஷனை ஒட்டி ரோடு ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 22, 2025 03:24 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஒட்டிய பிரதான சாலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆக்கிரமிப்பால் 10 அடி ஆகலம் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து அவை அகற்றப்பட்டுள்ளது.
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இருந்து மதுரை மெயின் ரோட்டிற்கு பிரதான பாதையில் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஒட்டி மூன்று பக்கமும் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், ஆட்டோக்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தது. இதனால் 10 அடி அகலத்திற்கு சாலை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி ஏற்கனவே நடந்த புதிய தார் ரோடு பணிகளும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து ''தினமலர்'' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக பாதையை ஆக்கிரமித்து இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. செய்தி வெளியிட்டதற்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.