/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் சாலை பராமரிப்பு ஊழியர்கள்
/
கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் சாலை பராமரிப்பு ஊழியர்கள்
கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் சாலை பராமரிப்பு ஊழியர்கள்
கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் சாலை பராமரிப்பு ஊழியர்கள்
ADDED : ஜன 02, 2025 11:57 PM
விருதுநகர்:சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க கால ஊதியம், ஓய்வூதியத்தை கணக்கிட வேண்டும் என கோரிக்கை கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடப்பதாக விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் வைரவன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் சாலை பராமரிப்பு பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை ஊதியம், ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2024 அக்., 23ல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என 2024 டிச., 19ல் கோவை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
ஆனால் பல பணியாளர்கள் அடுத்தாண்டில் பணி ஓய்வு பெற உள்ளனர். இவர்களின் பணி ஓய்வு காலத்தை நிம்மதியானதாக மாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி முதல்வர், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், நிதி அமைச்சர், தலைமை செயலர், நிதி செயலர், அரசு முதன்மை செயலர், நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு தலைமை பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

