ADDED : செப் 29, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் சமூக நற்பணி மன்றத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு , சாலை விதிகள் விழிப்புணர்வு நடந்தது.
பேராசிரியர் மாலா தலைமை வகித்தார். முதல்வர் உமாராணி ஆலோசனைகள் வழங்கினார். பேராசிரியர்கள் சரவண மூர்த்தி, அமுதா, முத்துசெல்வன் முன்னிலை வகித்தனர். மாணவி ஆதிலட்சுமி வரவேற்றார்.
டவுன் போக்குவரத்து எஸ்.ஐ., பாலமுருகன், அலுவலர் ஆனந்தன் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிதல், அதிவேகத்தை தவிர்த்தல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் குறித்து விளக்கினர். மாணவி கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.