ADDED : ஆக 14, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதையில்லா தமிழகம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தலைமை ஆசிரியர் சுஜாதா தாமஸ் தலைமையில் நடத்தப்பட்டது.
ஜே.ஆர்.சி., பொறுப்பு ஆசிரியர் முருகேசன் குமரப்பா, வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ., கார்த்திகா, பேசினர். மாணவர்கள் மக்களுக்கு விழிப் புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
ஆசிரியர்கள் அழகுமுத்து பாண்டி, தாமோதரன், பாலமுருகன், காளீஸ்வரி, உமாதேவி பங்கேற்றனர்.