தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோடு பணி தடுத்து நிறுத்தம்

ரோடு பணி தடுத்து நிறுத்தம்

ரோடு பணி தடுத்து நிறுத்தம்


ADDED : பிப் 09, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 21-வது வார்டு பூபால்பட்டி வடக்கு தெருவில் ஏற்கனவே இருந்த சாலை உயரமாக உள்ளதால் மழை நேரங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து சுகாதார கேடு ஏற்படுகிறது.

நேற்று காலை இப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக சாக்கடை ஒட்டிய பக்கவாட்டு பகுதி ஒரு அடி உயரத்திற்கு பலகை அமைக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள உயரத்துடன் இதுவும் சேர்ந்தால் வீடுகள் பள்ளங்களுக்குள் சென்று அதிக பாதிப்பு ஏற்படும் என கூறி தி.மு.க., கவுன்சிலர் ஞானவேலிடம் புகார் தெரிவித்தனர்.

ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி பணிகளை தொடர இருந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலையை நிறுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us