ADDED : ஜூலை 30, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் குமார்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் செந்தில்வேல், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா பேசினர். மாவட்ட பொருளாளர் திருப்பதிராஜ் நன்றிக்கூறினார்.