/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம், சுகாதார வளாகம் இல்லை
/
ரோடு, வாறுகால் சேதம், சுகாதார வளாகம் இல்லை
ADDED : நவ 05, 2024 04:50 AM

சிவகாசி: தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், சுகாதார வளாகம் இல்லை என செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனி, கோபால் நகர் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனி, கோபால் நகரில் தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராதது முக்கிய பிரச்னையாக உள்ளது. வருமானவரித்துறை அலுவலகம் வழியாக என்.ஜி.ஓ., காலனி செல்லும் மெயின் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதே ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பெரும்பான்மையான தெருக்களில் உயர் அழுத்த மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றது. தவிர மரக்கிளைகளிலும் ஒயர்கள் உரசுவதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. அனைத்து தெருக்களிலும் நாய்கள் தொல்லையால் விபத்துக்கள் ஏற்படுகிறது. தெருவிளக்குகள் பற்றாக்குறையால் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.
தமிழ்ச்செல்வன்: இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லை. மயானமும் இல்லாததால் ஏதேனும் இறப்பு நேரிடுகையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகின்றது. அங்கன்வாடி மையம் இல்லாததால் இப்பகுதி குழந்தைகள் கங்காகுளம் செல்ல வேண்டியுள்ளது. தவிர இப்பகுதியில் குளியல் தொட்டி அமைக்க வேண்டும்.
சக்திவேல் ராஜன், வியாபாரி: என்.ஜி.ஓ., காலனியில் 25 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் 15க்கும் மேற்பட்ட தெருக்களில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தெரு முழுவதுமே குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகின்றது. தவிர வாறுகாலும் சேதம் அடைந்து இருப்பதால் கழிவுநீர் தெருவில் ஓடுகின்றது.
கவிதா, குடும்பத் தலைவி: கோபால் நகரில் தெருவில் ரோடு, வாறுகால் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் நடமாட சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே உடனடியாக ரோட்டினை சீரமைக்க வேண்டும்.