/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி அச்சங்குளத்தில் மழைக்கு சேதமடைந்த வீதிகள்: மக்கள் நடமாட சிரமம்

ADDED : அக் 19, 2025 09:36 PM
காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் மழைக்கு வீதியில் போடப்பட்டிருந்த சிமென்ட், பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்த தால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குண்டும், குழியுமாக இருந்த பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல சிரமம் இருந்து வருகிறது.
இந்நிலையில் அச்சங்குளத்தில் பெய்த கன மழைக்கு வீதியில் போடப்பட்டிருந்த சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் கற்கள் அடித்து செல்லப்பட்டது. ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மக்கள் நடமாட லாயக்கற்றதாக உள்ளது. சிறுவர்கள், வயதானவர்கள் நடமாட முடியவில்லை. இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். டூவீலர் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
மழைநீர் தேங்கி நிற் பதால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அக் கிராமத்தில் எலிக்காய்ச்சல் தாக்கி பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர். மீண்டும் எலிக்காய்ச்சல் தாக்கி விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சத்தை போக்க, சேதமடைந்த வீதிகளை சீரமைத்து, மழை நீர் தேங்க விடாது தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.