/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருப்புக்கோட்டையில் 115.50 மி.மீ., பதிவு, வீடுகளுக்குள் வெள்ளம்
/
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருப்புக்கோட்டையில் 115.50 மி.மீ., பதிவு, வீடுகளுக்குள் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருப்புக்கோட்டையில் 115.50 மி.மீ., பதிவு, வீடுகளுக்குள் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அருப்புக்கோட்டையில் 115.50 மி.மீ., பதிவு, வீடுகளுக்குள் வெள்ளம்
ADDED : அக் 19, 2025 09:37 PM

அருப்புக்கோட்டை: மாவட்டத்தில் அருப்புக் கோட்டை, ஸ்ரீவில்லி புத்துாரில் பெய்த கனத்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீர், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன.
அருப்புக்கோட்டையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு கனமழை பெய்தது. நகரின் முக்கிய பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் காலனியில் 30க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தது.
அதிகாலையில் வெள்ளம் வந்ததால் துாங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து எழுந்து வெள்ளத்தை வெளியேற்றினர். மீனாட்சி நகர் பகுதியில் உள்ள பிரதான ஓடை ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் வெளியேற வழி இன்றி வேல்முருகன் காலனி வீடுகளுக்குள் புகுந்தது. காந்தி நகரில் பெட்ரோல் பங்கின் கூரை சாய்ந்தது.
நகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியில் தாழ்வான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மணி நகரம் பகுதியில் ஒரு ஓட்டு வீட்டின் கூரை மீது செம்பட்டி குருஞ்சாக்குளம், தொட்டியாங்குளம் கண்மாய்கள் நிறைந்தன.
* விருதுநகர் அருகே குல்லுார் சந்தையில் இருந்து அரசகுடும்பன் பட்டிக்கு செல்லும் தரைப்பாலம் கனமழையால் மூழ்கியது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண் பகத் தோப்பு பேயனாற்றில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையில் 47.56 அடிக்கு 39 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.