/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்ராக்ட் சங்க பதவியேற்பு விழா
/
ரோட்ராக்ட் சங்க பதவியேற்பு விழா
ADDED : ஆக 05, 2025 06:47 AM

விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் ரோட்ராக்ட் சங்கத்தின் புது உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் மயில் பாலசுப்பிரமணியம், விருதுநகர் ரோட்ராக்ட் சங்க தலைவர் காயத்ரி கலந்து கொண்டனர். காமராஜ் ரோட்ராக்ட் சங்க உடனடி முன்னாள் தலைவர் மீனா கவின், தற்போது தலைவராக பதவி ஏற்கும் அர்ச்சனாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெங்கடேஷ் செயலாளராகவும், அஸ்வினி பொருளாளராகவும், பதவி ஏற்றுக்கொண்டனர்.
இச்சங்க முதல் திட்டமாக குழந்தைகளுக்கு நுரையீரல் புற்றுநோய் தடுப்பு தொடர்பான பிரசுரத்தை மயில் பாலசுப்பிரமணியம் வெளியிட்டார். ரோட்ராக்ட் சங்க மாவட்ட ஆளுனர் குருசாமி, ரோட்ராக்ட் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்.
விருதுநகர் ரோட்டசரி சங்க தலைவர் பெத்தனாட்சி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் பங்கேற்று வாழ்த்தினர். கல்லுாரி துணை தலைவர் பாலகிருஷ்ணன், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டத்தில் ரோட்டரி, ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

