ADDED : ஜூலை 19, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார: ஸ்ரீவில்லிபுத்துாரில்ரோட்டரி மாவட்டம் 3212ன் மண்டலம் 10ன் செயல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
துணை கவர்னர் முருகதாசன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர்பால்சாமி, முன்னாள் துணை கவர்னர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் துணை கவர்னர் வேலாயுதம் வரவேற்றார்.
மாவட்ட கவர்னர் தினேஷ் பாபு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் குமாரசாமி, ராஜு, ஜெய் கண்ணன், ராம்குமார் பங்கேற்றனர்.
நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் சமுதாயகல்லுாரி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 இலவச பயிற்சி வகுப்புகள்துவக்க விழா நடந்தது.ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர். செயலாளர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.