/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரடு, முரடான ரோடு: கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
/
கரடு, முரடான ரோடு: கண்மாயில் கலக்கும் கழிவுநீர்
ADDED : மார் 01, 2024 12:07 AM
அருப்புக்கோட்டை, - அருப்புக்கோட்டை அருகே சீதாலட்சுமி நகர் தெருக்களின் ரோடுகள் நடக்க முடியாமல் கரடு முரடாகவும், அருகில் உள்ள கண்மாயில் புறநகர் பகுதிகளின் ஒட்டுமொத்த கழிவுநீர் விடப்பட்டு தண்ணீர் பாதிப்படையும் சூழ்நிலை உள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி . இதற்குட்பட்ட சீதாலட்சுமி நகரில் 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து சீதாலட்சுமி நகருக்கு வரும் பிரதான சாலை தார் கண்டு ஆண்டு கணக்கில் ஆகிவிட்டது. இந்த பகுதிக்கு வரும் வழியில் உள்ள 30 அடி வீதியின் நடுவில் மின்கம்பங்கள் இருப்பதால் கனரக வாகனங்கள் வர முடியாமல் சிரமமாக உள்ளது.
சீதாலட்சுமி நகரின் அருகில் கடமங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஊராட்சி 10க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைத்து சீதாலட்சுமி நகர், இந்திரா நகர், இபி., காலனி, திருக்குமரன் நகர் உட்பட, 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கின்றனர்.
இந்த கண்மாயில் புறநகர் பகுதிகளின் ஒட்டு மொத்த கழிவு நீர் சேர்கிறது. இதனால், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, கண்மாயில் விடுவதற்காக 3, 4 இடங்களில், திரவகழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தலா 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியில் கிடை மட்ட வடிகட்டி தொட்டி அமைத்து அதில் கழிவுநீரை விட்டு, சுத்திகரிப்பு செய்து கண்மாயில் செல்லும் வகையில் கட்டமைப்பு செய்தனர்.
ஆனால், கடமைக்கு அமைத்ததால், கழிவுநீர் மீண்டும் வாறுகாலில் தேங்கி, வழிந்து கண்மாயில் நேரடியாக கலக்கிறது. இதை ஆய்வு செய்து சரி செய்வதில் ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. கண்மாயில் கழிவுநீர் அதிக அளவில் சேர்வதால் கண்மாயில் தண்ணீரின் சுவை மாறிவிட்டதாகவும், போர்வெல்லில் வரும் தண்ணீர் கருப்பு நிறத்தில் உள்ளது பல தெருக்களில் மேடும், பள்ளமுமாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் நடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கொசு தொல்லை அதிக அளவில் உள்ளது கொசு மருந்து அடிப்பதில்லை. வாறுகாலை சுத்தம் செய்ய வருவதும் இல்லை. ஊராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீர் உப்பு தன்மையுடன் உள்ளது. தாமிரபரணி குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. தாமிரபரணி குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வர சிரமமாக உள்ளது. நாய் தொல்லைகளும் அதிகமாக உள்ளது.

