/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோ வாங்க ரூ.ஒரு லட்சம் மானியம்
/
ஆட்டோ வாங்க ரூ.ஒரு லட்சம் மானியம்
ADDED : ஆக 23, 2025 11:23 PM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: அமைப்புசாரா டிரைவர்கள், தானியங்கி மோட்டார் வாகனஙகள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், திருநங்கைகளுக்கு நலவாரியத்தின் மூலம் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
ஆட்டோ ரிக்சா மானியத்தில் வாங்குவதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் உறுப்பினரின் நலவாரிய அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு பாஸ்புக், பயணிகள் ஆட்டோ ரிக்சா வாகனம் இயக்குவதற்கான பேட்ஜ் உடன் கூடிய லைசென்ஸ், வாகனத்தில் விலைப்புள்ளி, வருவாய் சான்று உடன் விண்ணப்பித்து மானியம் பெற்று பயனடையலாம், என்றார்.