/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.1.15 லட்சம் மோசடி: --வேலுார் சகோதரர்கள் கைது --வேலுார் சகோதரர்கள் 2 பேர் கைது

ADDED : நவ 09, 2025 03:06 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் கார்டை மாற்றி கொடுத்து ரூ.1.15 லட்சம் எடுத்து மோசடி செய்த வேலுாரை சேர்ந்த சகோ தரர்கள் கார்த்திக் 27, பார்த்திபன் 24, ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் 57. இவர் அக். 14ல் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கு வந்த இளைஞர் இவருக்கு உதவுவது போல் நடித்து கார்டு வேலை செய்யவில்லை எனக் கூறியதால் வீடு திரும்பி உள்ளார்.
அதன் பின் ரமேஷின் அலைபேசி எண்ணிற்கு ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ. 40 ஆயிரம் ஏ.டி.மில் பணம் எடுத்ததும், ரூ.75 ஆயிரத்திற்கு பொருள் வாங்கியதும் தெரிந்தது. இதையடுத்து ரமேஷ், ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டே ஷனில் புகார் அளித்தார்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த போலீசார் வேலுார் மாவட்டம் பொய்கை நாவிதம் பட்டியை சேர்ந்த கார்த்திக் 27, அவரது சகோதரர் பார்த்திபன் 24, ஆகியோரை கைது செய்து அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இது போன்று பல்வேறு மாவட்டங்களில் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.