/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் சுறுசுறுப்பு ரயில் மேம்பாலங்கள் பொருத்தும் பணி விரைவில் துவக்கம்
/
ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் சுறுசுறுப்பு ரயில் மேம்பாலங்கள் பொருத்தும் பணி விரைவில் துவக்கம்
ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் சுறுசுறுப்பு ரயில் மேம்பாலங்கள் பொருத்தும் பணி விரைவில் துவக்கம்
ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் சுறுசுறுப்பு ரயில் மேம்பாலங்கள் பொருத்தும் பணி விரைவில் துவக்கம்
ADDED : நவ 09, 2025 06:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் சுறு சுறுப்பாக நடந்த வருகிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலங்கள் பொருத்தும் பணி இந்த வாரம் துவங்கி, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து ராஜபாளையம் வரை வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் திருமங்கலத்தில் இருந்து அழகாபுரி வரை ஒரு சில இடங்களில் மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை அனைத்து மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்தூர், ராஜபாளையம் முதுகுடி பகுதியில் ரயில் வழித்தட பாதைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.
இதற்காக ஹைதராபாத்தில் இரும்பு மேம்பாலங்கள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ரயில்வே வழித்தடத்தில் அமைக்க கொண்டு வரப்பட்டது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்த வாரத்திற்குள்ளும், ராஜபாளையத்தில் அதற்கு அடுத்த ஓரிரு வாரத்திலும் இரும்பு மேம்பாலங்கள் பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக ரயில்வே மின்வழிப் பாதையில் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிந்து அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை உள்ள நான்கு வழி சாலையில் இம்மாத இறுதிக்குள்ளோ, டிசம்பர் முதல் வாரத்திலோ வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

