/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் குழுவினருக்கு ரூ. 21.78 கோடி கடனுதவி
/
மகளிர் குழுவினருக்கு ரூ. 21.78 கோடி கடனுதவி
ADDED : அக் 26, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். சப் கலெக்டர் முகமது இர்பான் அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா முன்னிலை வகித்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு சிவகாசி நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள 148 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 1300 மகளிருக்கு ரூ. 10.10 கோடி வங்கி கடன் உதவிகள் வழங்கினார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன் ராஜ் கலந்து கொண்டனர்.

