/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் உதவித்தொகை
/
கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் உதவித்தொகை
கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் உதவித்தொகை
கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் உதவித்தொகை
ADDED : ஏப் 04, 2025 06:15 AM
விருதுநகர்: இறந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு போலீஸ் நண்பர்கள் குழு சார்பில்திரட்டப்பட்ட ரூ. 23,30,500 உதவித் தொகையை மாவட்ட எஸ்.பி., கண்ணன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு கான்ஸ்டபிளாக பணியாற்றிய மதுரை வெள்ளாகுளம் தாத்தப்பா பாஸ்கர் 32, பிப்ரவரியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருடன் பணிபுரிந்த 2017 பேட்ச் போலீசார், 'காக்கும் உறவுகள்' எனும் வாட்ஸ்ஆப் குழு மூலம் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 921 போலீஸ் நண்பர்களிடம் இருந்து ரூ. 23 லட்சத்து 30 ஆயிரத்து 500 சேகரித்தனர்.
அவற்றை உயிரிழந்த கான்ஸ்டபிளின் மகன் யோகேஷ் பெயரில் ரூ. 12 லட்சம் வைப்புத் தொகை, மனைவி விஜயராணி பெயரில் ரூ. 4 லட்சம் வைப்புத் தொகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், பெற்றோர் பெயரில் ரூ. 6 லட்சம் வைப்புத் தொகை, ரூ. 30 ஆயிரத்து 500 ரொக்கமாக வழங்கப்பட்டது.
மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், மாவட்ட குழு நிர்வாகிகள் சதீஸ்பாண்டி, சரவணன், சுந்தர்ராஜ், சிவகங்கை நிர்வாகி முகமது அஸ்லம் உடனிருந்தனர்.

