/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தபால் தலை சேகரிப்பு ஆர்வம் இருந்தால் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
/
தபால் தலை சேகரிப்பு ஆர்வம் இருந்தால் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
தபால் தலை சேகரிப்பு ஆர்வம் இருந்தால் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
தபால் தலை சேகரிப்பு ஆர்வம் இருந்தால் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
ADDED : ஆக 20, 2025 07:11 AM
விருதுநகர்; முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: தபால் தலை சேகரிப்பை மாணவர்கள் இடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்னும் உதவித் தொகை திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி இறுதித் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தபால் தலை பள்ளி கிளப்பில் உறுப்பினராக அல்லது அஞ்சலகத்தில் தபால் தலை கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும். இக்கணக்கை தலைமை அஞ்சலகத்தில் ரூ.200 செலுத்தி துவங்கலாம். பள்ளியில் கிளப் துவங்கி அதன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.cept.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தி போஸ்ட்மாஸ்டர் ஜெனரல், சதர்ன் ரிஜியன், மதுரை, 625 002 என்ற முகவரியில் செப். 1க்குள் அனுப்ப வேண்டும். எழுத்து வினாடி வினா செப். 20ல் நடக்கிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தபால் தலை சேகரிப்பு என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.