/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடுகளில் திரிந்த மாடுகளுக்கு ரூ.92 ஆயிரம் அபராதம்
/
ரோடுகளில் திரிந்த மாடுகளுக்கு ரூ.92 ஆயிரம் அபராதம்
ரோடுகளில் திரிந்த மாடுகளுக்கு ரூ.92 ஆயிரம் அபராதம்
ரோடுகளில் திரிந்த மாடுகளுக்கு ரூ.92 ஆயிரம் அபராதம்
ADDED : டிச 14, 2024 05:16 AM
சிவகாசி : சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 92 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் தினமும் மாடுகள் ரோட்டில் நடமாடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது.
பள்ளி மாணவர்கள், டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஆனையூர் ஊராட்சி நிர்வாகத்தினர் ரோட்டில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 13 பேருக்கு தலா ரூ. 5000 கன்றுகளுக்கு தலா ரூ. 3000 என 92 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.