ADDED : ஜூலை 17, 2025 11:38 PM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடந்தது.
காவி கொடிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி விழாவை துவக்கினர். சத்திரப்பட்டி ஆறுமுகா குரூப் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., சேவை பிரிவு தென்பாரத செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது: ஒவ்வொரு ஹிந்துவுக்கும் தாய், தந்தையை காப்பாற்றுவது எப்படி கடமையோ, அதே போல் தாய் நாட்டையும், தாய் மதத்தையும் காக்க ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும். ஜாதி மத பாகுபாடு, தீண்டாமையை அறவே இல்லாமல் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பண்டிகைகள், இவைகளை கொண்டாட வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து பின்பற்ற வேண்டும். இவற்றை எல்லாம் நுாறு ஆண்டுகளாக சாதிக்க முடியும் என உலகிற்கு காட்டிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்றார். நகர் தலைவர் ரவி நன்றி கூறினார்.