sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வைக்கும் பணிகளை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.,

/

 அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வைக்கும் பணிகளை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.,

 அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வைக்கும் பணிகளை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.,

 அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வைக்கும் பணிகளை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.,


ADDED : மார் 04, 2026 05:41 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: ''தனி மனிதனை அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வைக்கும் பணிகளை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது,'' என அதன் மாநில பொறுப்பாளர் ராஜ முருகானந்தம் பேசினார்.

சிவகாசியில் ஆர்.எஸ்.எஸ்., நுாறாவது ஆண்டையொட்டி கருத்தரங்கம் நடந்தது.

தென் பாரத தலைவர் வன்னிய ராஜன், மதுரை கோட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தனர்.

இதில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் ராஜ முருகானந்தம் பேசியதாவது, ஆர்.எஸ்.எஸ்., தனி மனிதனை அறம் சார்ந்த வாழ்க்கையை கற்றுத் தருவதற்காக உருவாக்கப் பட்டது. அதன்படியே செயல்படுகிறது.

தனி மனிதனை நல்ல குடிமகனாக தேசபக்தி மிகுந்தவர்களாக மாற்றுவதற்கு நுாறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் அமைப்பு அல்ல.

நமது முன்னோர்கள் சொன்ன வழியில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறது. யாரும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதில்லை.

அனைவரும் சமம் இதுதான் இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள். குடும்ப முன்னேற்றம், சமுதாய நல்லிணக்கம், சுதேசி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை நிபுணர்கள் மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பொருளாளர் கண்ணன் சிவகாசி ஒன்றிய தலைவர் சீனிவாசகம் செய்தனர்.






      Dinamalar
      Follow us