/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஆர்.டி.ஐ., விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விருதுநகரில் ஆர்.டி.ஐ., விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2026 05:31 AM
விருதுநகர்: விருதுநகரில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தலைமை வகித்தார். மனுதாரர்கள் கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் 5 நாட்களில் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நிலுவையிலுள்ள ஆர்.டி.ஐ., மனுக்கள் பற்றி வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்ட வழங்கல் துறை ஆகிய துறைகளின் 30 மனுக்கள் அதிகாரிகளிடம் மீது அலுவலர்களிடம் விசாரணை நடந்தது. டி.ஆர்.ஓ., ஆனந்தி, ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா பங்கேற்றனர்.

