நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர். என். எம். கல்லுாரி நிறுவனர் எஸ்.ஆர்.நாயுடு நினைவு நாளை முன்னிட்டு நிறுவனர் தின விழா நடந்தது.
அவரது உருவச் சிலைக்கு மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகக் குழு தலைவர் சாந்தலட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் டி.ஆர்.,கண்ணன், இணைச் செயலாளர் சீனிவாசகன் முன்னிலை வகித்தனர். பாரம்பரியம், தொழில் முனைதல், நிறுவன முன்னேற்றம் குறித்து பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி தலைவர் சோலைச்சாமி, சென்னை சி.ஐ.டி., கல்லுாரி தலைவர் ஸ்ரீராம் பேசினர்.
எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரி வளர்ச்சி, சாதனைகள் கூறும் காணொலி திரையிடப்பட்டது. கல்லுாரி வளர்ச்சி பரிணாமங்களை 3ம் ஆண்டு கணிப்பொறித் துறை மாணவர் அருள் டேவிட் பேசினார். தொழிலதிபர்கள், வணிகத் துறையினர் கலந்து கொண்டனர்.

